AUTHOR OF THIS STORY - SABARI PARAMASIVAN
அந்த வாலிபனின் ஆசை
சில ஆண்டுகளுக்கு முன்னால், காலிஃபோர்னியாவில் ஒரு வாலிபன் இருந்தான். படித்து முடித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால், அவனுக்கு அந்த வேலை திருப்தியளிக்கவில்லை. காரணம், அவனுக்கு சிறுவயதிலிருந்தே சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. தனது அனுபவத்திற்கு ஒரு உணவகம் ஆரம்பித்தால் அது அதிக லாபத்தைக் கொடுக்கும் என்பதும் அவனுக்குத் தெரியும்.அதனால், நன்கு யோசித்து, அதற்கானத் திட்டங்களையும் வகுத்தான்.
To watch this story as a video, please click on the Play Button.
தடையாக வந்த வறுமை
ஒரு தொழில் தொடங்க வேண்டுமெனில், கனவும் திட்டங்களும் மட்டும் போதாது. அதில் முதலீடு செய்ய பணமும் வேண்டுமல்லவா ? தன்னுடைய சேமிப்பு, வங்கியில் வாங்கிய கடன் என்று எல்லாவற்றையும் திரட்டிப் பார்த்தால் வெறும் 5000 டாலர் மட்டுமே இருந்தது.
அதை வைத்துக்கொண்டு, நிச்சயமாக ஒரு நேர்த்தியான உணவகத்தைத் தொடங்க முடியாது. பெரிய அளவில் தொடங்காமல், சிறிய அளவில் எதையாவது செய்தால், தனது நண்பர்கள், தன்னுடன் வேலை செய்பவர்கள் இளக்காரமாக நினைப்பார்கள் என்ற எண்ணம், அவனைத் தடுத்தது.
வேலையில் தொடரவும் முடியாமல், விரும்பியதைச் செய்யவும் முடியாமல், இருதலைக் கொல்லி எறும்பாகச் சிக்கித் தவித்தான். ஒரு சில மாதங்களில், அவன் முகத்தில் கவலையின் ரேகை தெரிய ஆரம்பித்தது.
அந்த மாதிரியான நேரத்தில்தான், அவனது தந்தை அவனை சந்திக்க வந்தார். அவன் அவரிடம் சரியாகப் பேசவில்லை. எரிந்து விழுந்தான். அவன் பேச்சிலிருந்து, அவனது மனநிலை அவருக்கு நன்றாகப் புரிந்தது. அவரிடமும், அவனுக்குக் கொடுக்க போதுமான பணம் ஒன்றும் கிடையாது.
ஆனால், ஒரு தந்தை மகனுக்குக் கொடுக்க வேண்டியது, பணமும் சொத்துமல்ல. கல்வியும் மன தைரியமும். அதை உணர்ந்த அவர், அவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க எண்ணினார்.
" நீ மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறாய். அதனால், உன்னை நான் வெளியே அழைத்துச் செல்ல விரும்புகிறேன். வெளியே எங்காவது சென்றுவந்தால், உனது மனம் இலகுவாகும்" என்று சொல்லி, அவனை வெளியே அழைத்துச் சென்றார்.
பீசா கடையில் உதித்த ஞானம்
ஒரு பிட்ஸேரியாவுக்கு அவனை அழைத்துச் சென்றார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே "நீ எதற்காக இத்தனைக் குழம்புகிராய் ? கையில் இருக்கும் பணத்தை வைத்து சிறிய அளவில் எதையாவது ஆரம்பித்து, பின்னாளில் அதை விரிவுபடுத்தலாமில்லையா ?" என்று கேட்டார்.
"அது கடினம். சிறியதாக எதாவது ஆரம்பித்தால், என் நண்பர்கள், உடன் வேலைபார்ப்பவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் ? என்னைக் கேலி செய்வார்கள். என்னைப்பற்றி இளக்காரமாகப் பேசிக்கொள்வார்கள்.
எல்லாம் என்னுடைய தலைவிதி. பணமில்லாத ஒருவனாகப் பிறந்துவிட்டேனே !!" , என்று சொன்னான்.
"அப்படியில்லை. அவர்களை நினைப்பதைப் பற்றி நீ கவலைப்படாதே. சாதாரணமாக ஆரம்பித்த எத்தனையோ தொழில்கள், நிறுவனங்கள் இன்று வானளவு உயர்ந்து நிற்கின்றன. நீ பயப்படாதே. இருப்பதை வைத்து தொழிலை ஆரம்பித்துவிடு" ,என்றார் அந்தத் தந்தை.
"நீங்கள் பழைய காலத்தில் இருக்கிறீர்கள். உங்களிடம் எனக்குத் தரப் பணம் இல்லையென்பதால், சமாளிக்கிறீர்கள்" , என்றான்.
அந்தத் தந்தை, அந்த இடத்திலிருந்து எழும்பினார். தனது மகனின் கரத்தைப் பிடித்து எழவைத்து, அவனை இழுத்துக் கொண்டு, அந்தப் பிட்ஸேரியாவின் வாசலுக்குச் சென்றார். அதற்கு அருகில் இன்னொரு ஜப்பானிய உணவகமும், இவை இரண்டுக்கும் நடுவில் ஒரு குறுகிய வாசலும் இருந்தது.
அந்த வாசலின் அருகில் கொண்டுபோய் நிறுத்திவிட்டு, அந்தத் தந்தை சொன்னார்.
"சில வருடங்களுக்கு முன்னால், இப்பொழுது நீ நிற்கும் இதே வாசலின் முன்பு, மூன்று வாலிபர்கள் நின்றார்கள். அவர்களிடம் ஒரு திட்டம் இருந்ததது. உழைக்கும் எண்ணம் இருந்தது. ஆனால், ஒரு நல்ல அலுவலகத்தைப் பிடித்துக்கொள்ளும் அளவுக்குப் போதுமான அளவு பணம் இருக்கவில்லை.
ஆனாலும், தங்களுக்குக் கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு, இதோ இந்தக் குறுகிய வாசல் வழியாக மட்டுமே நுழைய முடிந்த, இதன் மேலிருக்கும் சிறிய இடத்தைத் தங்களது அலுவலகமாகத் தேர்ந்தெடுத்தார்கள்.
அதே இடத்தில்தான், தங்களது கண்டுபிடிப்பை உருவாக்கினார்கள். நான் கண்டுபிடிப்பு என்று சொல்வது வேறு எதுவும்மில்லை. இன்று பில்லியன் கணக்கில் வருமானத்தை ஈட்டிக்கொண்டிருக்கும், உலகத்திலேயே இரண்டாவது பிரபலமான தளமான YOUTUBE"
அவனுடைய தந்தை சொல்லி முடிக்கவும், அந்த வாலிபன் மறுபடியும் அந்த சிறிய வாசலைப் பார்த்தான். தன் மனதில் அவன் கேட்டுக்கொண்டிருந்த எல்லாக் கேள்விகளுக்கும் அந்த வாசல் பதில் சொல்லியது.
YOUTUBE-ன் தொடக்கநிலை நமக்குச் சொல்லும் பாடம் என்ன ?
சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த YOUTUBE-க்காகப் பின்னாளில் பல நிறுவனங்கள் மில்லியன் கணக்கில் டாலர்களை முதலீடு செய்தார்கள். ஆனால், 2006-ஆம் ஆண்டு இறுதியில், பில்லியன் கணக்கில் டாலர்களைக் கொட்டிக்கொடுத்து இந்த YOUTUBE-ஐ வாங்கியது.
இவர்கள் கடந்து வந்த பாதை மிகவும் பெரியது. நான் சொன்னதெல்லாம் வெறும் 10 சதவிகிதம்தான்.
இன்றும்கூட, இதைப்படித்துக் கொண்டிருக்கும் நீங்களும், இதே மாதிரியான ஆசைகளோடு, கனவுகளோடு இருக்கலாம்.
ஆனாலும், "நம்மிடம் போதுமான தொகை இல்லையே. இதை வைத்துக்கொண்டு மிகச்சிறிய அளவில் தொடங்கினால், நம்மைப் பார்த்து அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் ? நம்மை அவமானப் படுத்துவார்களே !" என்று நினைத்துக்கொண்டு தொடங்காமலோ அல்லது தொடங்கிவிட்டது வருந்திக்கொண்டோகூட இருக்கலாம்.
அப்படி இருந்தீர்களானால், ஒன்றை மட்டும் நினைவில் நிறுத்துங்கள். இந்த உலகத்தில் நீங்கள் அண்ணார்ந்து பார்க்கும் பல நிறுவனங்கள், மிக மிகச் சாதாரணமான துவக்கங்களைக் கொண்டவைகள்தான். அண்ணார்ந்து அதன் உயரத்தைப் பார்க்கும் நீங்கள், குனிந்து அதன் அஸ்திபாரத்தையும் பாருங்கள்.
பல நேரங்களில் நம்மைத் தடுப்பது, இந்த 'அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் ?' என்ற எண்ணம்தான்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இந்தமாதிரியான ஒரு அலுலகத்தை தன்னுடைய நண்பர்களிடம்கூட அறிமுகம் செய்துகொள்ள முடியாது இல்லையா ? அப்படி அறிமுகம் செய்தால், அதைக் கேலி செய்பவர்களும் இருப்பார்கள் இல்லையா ?
கேள்விகளுக்கு பயந்தால், வெற்றி கிடைக்காது. கேலிக்கும் கிண்டலுக்கும் பயந்தால், வெற்றியை நினைக்கக்கூட முடியாது.
ஒன்று சொல்கிறேன். வெற்றி பெற்றவனுக்கும் தோல்வி அடைந்தவனுக்கும் இந்த வரலாற்றில் இடமுண்டு. கைகட்டி வேடிக்கைப் பார்த்தவனுக்கு கிண்டலும் கேலியும் செய்தவனுக்கு நிச்சயமாக இடம் கிடையாது.
அதனால், அந்த நபர்களுக்கு உங்கள் வெற்றியை நீங்கள் விட்டுவிடாதீர்கள். இது உங்களுக்கான களம். வீழ்ந்தாலும் வாழ்ந்தாலும் உங்கள் வாழ்க்கை. நீங்கள்தான் வாழவேண்டும். உங்கள் முடிவுகளை நீங்கள்தான் எடுக்கவேண்டும். உங்கள் முயற்சிகளை நீங்கள் தான் தொடங்க வேண்டும்.
அப்படி துணிவோடு நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு இயற்கையின் துணையும் இறைவனின் துணையும் எப்போதும்
Check these stories also from APPLEBOX
உங்களது கவனச்சிதறலுக்கு முடிவுகட்ட, இந்தக் கதையைக் கேளுங்கள்
தங்க மலர் - Golden Flower - An interesting Motivational Kutty Story in Tamil
தேவையில்லாத சாபத்தைப் பற்றி நீங்கள் அஞ்சிக் கொண்டிருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்
பயந்த செம்மறி ஆடுகள் - Scared Sheep - An interesting Motivational Kutty Story in Tamil
நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படும் நபராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்
மந்திர கடிகாரம் - Magical Watch - An interesting Motivational Kutty Story in Tamil
நீங்கள் நேரத்தின் முக்கியத்தை உணராதவாராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்
நான்கு ரகசியங்கள் - Four Secrets - An interesting Motivational Kutty Story in Tamil
Specially, this Tamil Motivational Story is an adaptation explain the History of Youtube in Tamil. This Youtube History must have encouraged you and helped you to come out of fear.